\
இந்தியில் ரீமேக்காகும் ‘ஓ மை கடவுளே’ - அஸ்வத் மாரிமுத்துவே இயக்குகிறார்!

இந்தியில் ரீமேக்காகும் ‘ஓ மை கடவுளே’ - அஸ்வத் மாரிமுத்துவே இயக்குகிறார்!

இந்தியில் ரீமேக்காகும் ‘ஓ மை கடவுளே’ - அஸ்வத் மாரிமுத்துவே இயக்குகிறார்!
Published on

கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஃப்ரெஷ்ஷான காதல் கதையுடன் காமெடியும் கலந்து கவனத்தை ஈர்த்தார் அஸ்வத் மாரிமுத்து. இவரின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தபோது தெலுங்கில் ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கவிருக்கிறார் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே, இப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் மகேஷ் பாபு பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு ரீமேக்கிலும் விஜய் சேதுபதிதான் கடவுளாக நடிக்கவிருக்கிறார். அஷோக் செல்வனாக தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் நடிக்கிறார். இந்நிலையில், ’ஓ மை கடவுளே’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்தியிலும் அவரே இயக்கவிருக்கிறார். தெலுங்கு ரீமேக்கை முடித்தப் பிறகு இந்தி ரீமேக்கை இயக்கவிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com