\
’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்: பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு நிறைவு

’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்: பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு நிறைவு

’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்: பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு நிறைவு
Published on

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடித்துள்ளார். பிரஷாந்தின் அப்பா தியாகராஜனே இப்படத்தை இயக்கி வருகிறார். ’அந்தாதூன்’படத்தின் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சமுத்திரகனி, வனிதா விஜயகுமார். கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில்,தற்போது படப்பிடிப்பை படக்குழு உற்சாகமாக முடித்துள்ளது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை மட்டும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். படத்தை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடவிருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com