நிக் ஜோனாஸை மணந்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா

நிக் ஜோனாஸை மணந்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா
நிக் ஜோனாஸை மணந்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா

ராஜஸ்தான் ஜோத்பூரில் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் இந்தி திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் நடைபெற்றது. 

2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்க்கு ஜோடியாக‘தமிழன்’ என்ற படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் குவாண்டிகா என்ற தொலைக்காட்சி தொடரில் பிரபலமாகி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். 

அப்போது அமெரிக்க பாப் பாடகராக இருக்கும் நிக் ஜோனாசுடன் காதல் கொண்டு கடந்த ஜுலை மாதம் இருவருக்கும் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

நிக் ஜோனாஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

திருமணத்துக்கு பிறகு குடியேற கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர். இவர்களின் திருமண ஏற்பாடுகள் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மெகந்தி விழாவுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து திருமண விழா நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் ஜோத்பூரில் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் இந்தி திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com