\
இன்று இந்தி நடிகை ரேகாவின் 63வது பிறந்த நாள்

இன்று இந்தி நடிகை ரேகாவின் 63வது பிறந்த நாள்

இன்று இந்தி நடிகை ரேகாவின் 63வது பிறந்த நாள்
Published on

பிரபல இந்தி நடிகை ரேகாவுக்கு இன்று 63வது பிறந்த தினம்.

இந்தி திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து, இன்று வரையிலும் திரையுலகின் நட்சத்திர நாயகியாக இருப்பவர் நடிகை ரேகா. தமிழ்த் திரையுலகின் காதல் மன்னன் என அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் மகளான ரேகா, தனது இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்துவர். பிறகு இந்தி படங்களின் பிரபல கதாநாயகியாக மாறினார். இதைத்தொடர்ந்து இந்திய திரையுலகின் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவராகவும் உருவெடுத்தார். தனது நடிப்பு திறமையின் மூலம் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், இந்தி படங்களில் நடிக்க தொடங்கிய போது, அவருக்கு இந்தி தெரியாது.இது பலருக்கும் தெரியாத உண்மை. ஆரம்பக் காலங்களில் இவருக்கு பின்னணி குரல் கொடுக்கும் தேவை இருந்தது. பின்னர் ரேகாவே இந்தியை கற்று சொந்தக் குரலில் பேசத்தொடங்கினார். இந்தியின் பல வெற்றிப்படங்களில் முக்கிய பங்காற்றிய ரேகா, உம்ராவ் ஜான், சில்சிலா, கூப்சூரத், முக்தார் க சிக்கந்தர், மிஸ்டர் நட்வர்லால், உத்சவ் உள்ளிட்ட படங்கள் மூலம்  ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் இவர் பிடித்தார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com