மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ’பிரேமம்’. நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்திருந்த சாய் பல்லவி, மடோனா, அனுபமா பரமேஸ்வரன் அனைவரும் இப்போது பிசி நடிகைகளாகி விட்டனர்.
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்திருந்தார் சாய் பல்லவி. இந்தி நடிகரும் பாடகருமான அயூஷ்மன் குர்ரானா, பிரேமம் படத்தில் சாய்பல்லவியும் நிவின்பாலியும் ஆடிப்பாடும் பாடல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு சாய் பல்லவியை புகழ்ந்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சாய் பல்லவி, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.