20 நாட்களை கடந்தும் வசூலில் சாதனை - கோலிவுட்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ‘விக்ரம்’

20 நாட்களை கடந்தும் வசூலில் சாதனை - கோலிவுட்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ‘விக்ரம்’

20 நாட்களை கடந்தும் வசூலில் சாதனை - கோலிவுட்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ‘விக்ரம்’
Published on

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் பாக்ஸ் ஆபீஸில் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘கைதி’ படத்தின் சில சீக்குவல் காட்சிகளும், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சந்தான பாரதி, சூர்யா ஆகியோரின் மிரட்டல் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்ததால் படக்குழு எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது.

படம் வெளியாகி 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றும் பல திரையரங்குகளில் மாஸாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘விக்ரம்’ படம். வருகிற ஜூலை 8-ம் தேதி ஓடிடியில் இந்தப் படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் ‘விக்ரம்’ திரைப்படம் இரண்டாம் இடைத்தை பிடித்துள்ளது. 390.50 கோடி ரூபாய் இதுவரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இந்த வசூலை எட்டிய சில திரைப்படங்கள் லிஸ்ட் இங்கே:

1. 2.0 - ரூ. 664.70 கோடி

2. விக்ரம் - ரூ. 390.50 கோடி (20 நாட்கள்)

3. பிகில் - ரூ. 298.40 கோடி

4. எந்திரன் - ரூ. 288 கோடி

5. கபாலி - ரூ. 285.20 கோடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com