\
விஷாலுக்கு தடையில்லை

விஷாலுக்கு தடையில்லை

விஷாலுக்கு தடையில்லை
Published on

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷாலுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நடிகர் சங்கத்தை சேர்ந்த விஷால் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சரியானதே என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் விஷால் மனு ஏற்கப்பட்டதை எதிர்த்து கேயார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். விஷால் நடிகர் சங்க நிர்வாகியாக இருப்பதால் அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து அவரது மனுவை தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com