\
பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம்: புகாருக்கான எண்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம்: புகாருக்கான எண்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம்: புகாருக்கான எண்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
Published on

பைரவா திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ‌அமைக்க‌ப்பட்டுள்ள குழுக்களின் விவரத்தையும் புகாருக்கான எண்களையும் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் பைரவா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை ‌எடுக்க வேண்டும் என்று தேவராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கான தொலைபேசி எண்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு குறித்து தமிழக அரசு, பைரவா படத்தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர்கள் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி ராஜா உத்தரவிட்டார்‌. கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நாளை மறுதின‌த்திற்கு நீதிபதி ஒத்‌திவைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com