நடிகர் சங்க கட்டடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி 

நடிகர் சங்க கட்டடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி 

நடிகர் சங்க கட்டடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி 
Published on

பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

2017 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிறகு மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 33 அடி பொது சாலை என மனுதாரர்கள் குறிப்பிடும் இடத்திற்கு தகுந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்பு தவறிவிட்டது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நடிகர் சங்க கட்டடமோ அல்லது இடமோ பொது சாலையை ஆக்கிரமிக்கவில்லை என உயர்நீதிமன்றம் உறுதி படுத்தியுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com