தமிழர்களா? மோடியா?: ட்விட்டரில் கலக்கும் மெர்சல் ஹேஸ்டேக்..!

தமிழர்களா? மோடியா?: ட்விட்டரில் கலக்கும் மெர்சல் ஹேஸ்டேக்..!
தமிழர்களா? மோடியா?: ட்விட்டரில் கலக்கும் மெர்சல் ஹேஸ்டேக்..!

மெர்சல் திரைப்பட சர்ச்சை தொடர்பாக தமிழர்கள்Vsமோடி என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்டிரண்டாகி வருகிறது.

விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பாக வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழகத்தை தாண்டி தேசிய அளவில் மெர்சல் திரைப்பட சர்ச்சை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தேசிய ஊடகங்கள் மெர்சல் குறித்து விரிவாகவே செய்திகள் வெளியிட்டன. 

மெர்சல் சர்ச்சை தொடர்பாக ட்விட்டரில் பல்வேறு ஹேஸ்டேக்குகளில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இதில் நாள்தோறும் ஒரு புதிய ஹேஸ்டக் உருவாகிறது. முதலில் #Mersal என்ற ஹேஸ்டேக் தான் ட்ரெண்டில் இருந்தது. பின்னர் 
#MersalHit, #MersalPolitics, #MersalVsModi என்று மாறிக்கொண்டே இருந்தது. தற்போது இன்று #TamiliansVsModi என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டில் உள்ளது. இந்த ஹேஸ்டேக்கில் இந்திய அளவில் பல்வேறு தரப்பினும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரைப்படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com