”தீபிகா படுகோன்தான் எனக்கு ஜோடியா நடிக்கனும்” - கண்டிஷன் போட்ட பிரபல வங்கதேச யூடியூபர்!

”தீபிகா படுகோன்தான் எனக்கு ஜோடியா நடிக்கனும்” - கண்டிஷன் போட்ட பிரபல வங்கதேச யூடியூபர்!

”தீபிகா படுகோன்தான் எனக்கு ஜோடியா நடிக்கனும்” - கண்டிஷன் போட்ட பிரபல வங்கதேச யூடியூபர்!
Published on

இன்டெர்நெட் மூலம் பல பிரபலங்கள் உருவாகியிருந்தாலும், நாடு கடந்து லட்சக் கணக்கான ஃபாலோயர்ஸ்களை கொண்டிருக்கும் இன்டெர்நெட் பிரபலங்களில் ஒருவர்தான் வங்க தேசத்தைச் சேர்ந்த ஹீரோ ஆலோம்.

கிளாஸிக்கான பாடல்களை எந்தவொரு ராகமும் இல்லாமல் பாடுவதோடு, மாடல் அழகிகளுடன் சேர்ந்து நடனமாடுவதையும் இந்த `ஹீரோ ஆலோம்’ செய்து வருகிறார். தனித்துவமாக பாடல்களை பாடியே பிரபலமான இவரைக் கண்டு பொறாமை கொள்ளாத 90ஸ் கிட்ஸ்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பல இளம் பெண்களோடு நடனம் ஆடி பலரது புகைச்சலையும் பெற்றிருக்கிறார்.

அதே நேரத்தில், ட்யூன்லெஸ் பாடல்களை பாடுவது குறித்து ஹீரோ ஆலொம் மீது புகார்கள் வந்த நிலையில், அவரை கைது செய்த வங்க தேச போலீசார், இனிமேல் இப்படியெல்லாம் பாட்டு பாட மாட்டேன் என உத்தரவாதத்துடன் அவரிடம் எழுதி வாங்கியிருந்தனர்.

ஆனாலும் இணையதளங்களில் ஹீரோ அலோமிற்கு இருக்கும் மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்ஷர்கஞ்ச் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது காதலி ரியா மோனியுடன் வந்திருந்தார் ஹீரோ ஆலோம்.

அப்போது அங்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியின் போது பேசியுள்ள ஹீரோ ஆலொம், “இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அதற்கு முக்கியமான கண்டிஷனும் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

அப்படி அவர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா? பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் தீபிகா படுகோன் தனக்கு ஹீரோயினாக நடிப்பதாக இருந்தால் மட்டுமே, இந்திப் படங்களில் நடிப்பாராம் அவர்! அவர் இவ்வாறு கூறியது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

முன்னதாக, 2018ம் ஆண்டின் கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பிரபலங்களில் ஒருவராக இந்த ஹீரோ ஆலொம் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com