“2 ஆயிரம் படங்கள் என்னைக் கவர்ந்து உள்ளன” - தழுவல் புகார் குறித்து அட்லி 

 “2 ஆயிரம் படங்கள் என்னைக் கவர்ந்து உள்ளன” - தழுவல் புகார் குறித்து அட்லி 
 “2 ஆயிரம் படங்கள் என்னைக் கவர்ந்து உள்ளன” - தழுவல் புகார் குறித்து அட்லி 

தனது படங்கள் தழுவலாக உள்ளன என எழும் குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் அட்லி விளக்கம் அளித்துள்ளார். 

இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘பிகில்’. இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் அப்படத்தை ‘வெறித்தனமாக’ வெற்றியடைய வைக்க உழைத்து வருகிறார்கள். மேலும் படத்திற்கு விளம்பர பதாகைகள் வைப்பதை தவிர்த்து சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘பிகில்’ படம் வெற்றியை ஒட்டி அப்படத்தை பார்த்த ரசிகள் பலர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சக் தே இந்தியா’ படத்தை ஒப்பீட்டு கருத்து கூறி விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன் வெளியான இவரது ‘ராஜா ராணி’ படம் ‘மெளனராகம்’ படத்தின் தழுவலாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டது. 

அதன் பின் வெளியான ‘தெறி’ திரைப்படம் சத்ரியன் படத்தின் தழுவலாக உள்ளது என்றும், ‘மெர்சல்’ திரைப்படம் ‘அபூர்வசகோதரர்கள்’ படத்தினை நினைவு படுத்துவதாக உள்ளது என்றும் கூறப்பட்டன. இவ்வாறு இவரது படங்கள் அனைத்தும் தழுவலாக உள்ளது எனற விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது. ஒரு படத்தின் பாதிப்பில் ஒரு திரைப்படம் வரலாம். ஆனால் அந்தப் பாதிப்பை முறைப்படி படத்தின் இயக்குநராக அங்கீகரித்து நன்றி கூற வேண்டும் என்று சிலர் கூறிகின்றனர்.

இந்நிலையில் இந்தத் தழுவல் குற்றச்சாட்டு குறித்து அட்லி சில விளக்கங்களை அளித்துள்ளார். அதில், “நான் ஒவ்வொரு படத்தை பார்க்கும்போது அந்தப் படத்தால் கவரப்படுகிறேன். அப்படி ஒருவேளை நான் அங்கீகரிக்க வேண்டும் என்றால் என்னை கவர்ந்த 2 ஆயிரம் படங்களையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். 

என்னை ஆட்கொண்டவை பல, வெறும் சினிமா மட்டுமல்ல; நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீங்கள் ஒரு கதையை நேர்மையாக எழுதினால் போதும். வேறு வகையான படங்களை ஒப்பிட்டு பாதுகாப்பற்ற மனநிலையில் மக்கள் பேசுவார்கள். நான் நம்பிக்கையோடு தான் இருக்கிறேன். ஏனென்றால் இந்தப் படத்தின் கதை என்னுடையது. இவர்கள் குறிப்பிடும் படங்களை நானும் பார்த்திருக்கிறேன். நான் அதை விரும்பி இருக்கிறேன். ஆனால் அந்தப் படத்தின் பாதிப்பால் என் கதையை நான் எழுதவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com