\
அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் 'வலிமை' முதலிடம் - ட்விட்டர் இந்தியா பட்டியல்

அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் 'வலிமை' முதலிடம் - ட்விட்டர் இந்தியா பட்டியல்

அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் 'வலிமை' முதலிடம் - ட்விட்டர் இந்தியா பட்டியல்
Published on: 
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக்கில் 'வலிமை' முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து, இன்று 14-வது ஆண்டு விழாவை காண்கிறது. இதனையொட்டி  ட்விட்டரில் இன்று 'Hashtag Day' கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான நாட்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 ட்விட்டர் ஹேஷ்டேக் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. 
இதில், முதலிடத்தை நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' ஹேஷ்டேக் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் விஜயின் 'மாஸ்டர் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் 'சர்க்காரு வரி பாட்டா', 4-வது இடத்தில் அஜித்குமார், 5-வது இடத்தில் 'தளபதி 65’ ஹேஷ்டேகுகள் உள்ளன.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com