\
வெளியானது தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், சென்சார் தகவல்கள்

வெளியானது தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், சென்சார் தகவல்கள்

வெளியானது தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், சென்சார் தகவல்கள்
Published on

நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார்.

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசைமையத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 29-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 15 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. மேலும் படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் 29-ம் தேதிக்கான முன்பதிவு துவங்கியுள்ளதாக கூறப்படும்நிலையில், இதுகுறித்து ஓரிரு நாட்களில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com