ரஜினியின் 2.0 படத்தில் சொந்தக் குரலில் அக்ஷய் குமார் டப்பிங் பேசியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
மிஸ்டர் பிரமாண்டம் ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ திரைப்படம் பல மொழிகளில் வெளியாக உள்ளது. முதலில் இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளில் இதனை இயக்குநர் ஷங்கர் மறுத்தார். அதற்கு இந்தப் பாகத்திற்கும் தொடர்பு இல்லை என கூறியிருந்தார். படம் பல மொழிகளில் வெளிவர உள்ளதால் இதில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை தேர்வு செய்து நடிக்க வைத்திருந்தது படக்குழு. பொதுவாக இந்தி நடிகர்கள் தமிழில் அறிமுகமாகும் போது அதற்குதக்க சரியான நபரை தேர்வு செய்து தமிழில் டப்பிங் செய்வர். அமிதாப் முதன்முதலாக தமிழில் பேசிய போது அதற்கு சரியான நபராக நிழல்கள் ரவி இருந்தார். அதேபோல அக்ஷய் குமாருக்கு சரியான நபரை வைத்து டப்பிங் செய்ய வேண்டும் என போராடிக் கொண்டிருந்தது ‘2.ஓ’ படக்குழு.
இந்நிலையில் முறையான குரல் கிடைக்காததால் அக்ஷய் குமாரே தமிழில் முழுமையாக டப்பிங் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிக அற்பணிப்போடு அக்ஷய் அந்தப் பணியை செய்து முடித்துள்ளதாக சினிமா வட்டாரம் தகவல் வலம் வர தொடங்கியுள்ளது.