\
2ம் ஆண்டில் “பியார் பிரேமா காதல்”: யுவனுக்கு நன்றி தெரிவித்த ஹரிஷ் கல்யாண்!

2ம் ஆண்டில் “பியார் பிரேமா காதல்”: யுவனுக்கு நன்றி தெரிவித்த ஹரிஷ் கல்யாண்!

2ம் ஆண்டில் “பியார் பிரேமா காதல்”: யுவனுக்கு நன்றி தெரிவித்த ஹரிஷ் கல்யாண்!
Published on

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் இளன் இயக்கத்தில் முதன்முறையாக தயாரித்த “பியார் பிரேமா காதல்” படம் வெளியாகி இரண்டு வருடம் ஆகிறது. படம் வெற்றி பெற்றதோடு இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்ததால் இரண்டு வருடம் ஆனதையொட்டி யுவன்ஷங்கர் ராஜாவுக்கு, அப்படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிக்பாஸ் புகழ் ரைசா நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியானது. இரண்டு வருடத்தை நினைவுக்கூறும் வகையில் , இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண்,

 “ படத்தின் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான யுவன்ஷங்கர் ராஜா மற்றும் இயக்குநர் இளனோடு சேர்த்து மொத்தக் குழுவிற்கும் நன்றி சொல்லியுள்ளதோடு “தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத படமாக்கிய மக்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி” என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

நடுத்தர குடும்பத்து இளைஞருக்கும் பணக்கார முற்போக்கான பெண்ணுக்கும் இடையே நடக்கும் முழு காதல் கதைதான் ”பியார் பிரேமா காதல்”. இப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே இப்போதும் இளைஞர்களின் காதல் டியூன்களாகவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com