’அடங்காதே’ இயக்குநரின் அடுத்தப்படத்தில் நடிக்கிறார் ஹரிஷ் கல்யாண்

’அடங்காதே’ இயக்குநரின் அடுத்தப்படத்தில் நடிக்கிறார் ஹரிஷ் கல்யாண்

’அடங்காதே’ இயக்குநரின் அடுத்தப்படத்தில் நடிக்கிறார் ஹரிஷ் கல்யாண்
Published on

'அடங்காதே’ திரைப்படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ’அடங்காதே’. இந்தப் படம் மூலம் சண்முகம் முத்துச்சாமி இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதற்கு பிறகு விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இதைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தப் படத்திற்கான கதையை தயார் செய்து வரும் சண்முகம் முத்துச்சாமி ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அருள்நிதி நடிப்பில் வெளியான K-13 என்ற திரைப்படத்தை தயாரித்த எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com