யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் பிக்-பாஸ் ஜோடி

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் பிக்-பாஸ் ஜோடி

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் பிக்-பாஸ் ஜோடி
Published on

’பிக் பாஸ்’ மூலம் பிரபலமான இளம் ஜோடி ஹரிஷ் கல்யாண்- ரைசா நடிக்கும் படம், ’பியார் பிரேமா காதல்’. இளன் இதை இயக்குகிறார். இவர் கிருஷ்ணா நடித்துள்ள ’கிரகணம்’ படத்தை இயக்கியவர். இது காதல் -காமெடி படம். ஒய்எஸ்ஆர் பிலிம்ஸுடன் இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, கே புரொடக்‌ஷன் கே.ராஜராஜன், தயாரிக்கின்றனர்.

’காதலை இந்தியில் பியார் என்றும் தெலுங்கில் பிரேமா என்றும் சொல்வார்கள். அதை எல்லாம் சேர்த்து டைட்டில் வைத்திருக்கிறோம்’ என்றார் இளன்.

'ஒரு படத்தை தயாரிக்கும்போது கிடைக்கும் உற்சாகம் அளவற்றது. நல்ல கூட்டணி,  நல்ல கதை, நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள், முன்னேறி வரும் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சங்கமம் எங்கள் டீமை சிறப்பாக்கியுள்ளது. வெளிவராத திறமைகளை உலகிற்கு காண்பிப்பதே எங்கள் நோக்கம். இந்தப் படத்தை அடுத்து மேலும் பல படங்களை தயாரிக்க இருக்கிறோம்’ என்றார் யுவன் சங்கர் ராஜா. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com