\
மீண்டும் இணைந்தது ‘ஹர ஹர மஹாதேவகி’டீம்

மீண்டும் இணைந்தது ‘ஹர ஹர மஹாதேவகி’டீம்

மீண்டும் இணைந்தது ‘ஹர ஹர மஹாதேவகி’டீம்
Published on

கௌதம் கார்த்திக் நடித்த படம், ’ஹர ஹர மஹாதேவகி’. இதை சன் தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி இருந்தார். கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்தப் படத்தை அடுத்து இதே டீம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’என்ற படத்தில் இணைகிறது. ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வழங்குகிறார். இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். பாலமுரளி பாலா இசையமைக்கிறார்.

படம் பற்றி சன்தோஷ் பி ஜெயக்குமார் கூறும்போது‘ இது  அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் படம். படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்’என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com