நடிகை வரலக்ஷ்மியின் பிறந்த நாள் பரிசாக ‘மிஸ்டர் சந்திரமெளலி’ போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் இணைந்து முதன்முறையாக நடித்து வரும் திரைப்படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. இதன் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதனை இயக்குநர் திரு, இயக்கி வருகிறார். இப்படத்தில் கதைக்குத் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய கதாப்பாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாள். ஆகவே இப்படக்குழு வரலக்ஷ்மியின் போஸ்டர் ஒன்றை அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிட்டு உள்ளது.