ஹேப்பி பர்த்டே எஸ்டிஆர் ஹேஷ்டேக்கை ட்ரண்டாக்கும் சிம்பு ரசிகர்கள்
நடிகர் சிலம்பரசன் பிறந்த நாளான இன்று #HappyBirthdaySTR என்ற ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் ட்ரண்டாக்கி
வருகின்றனர்.
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து மழை குவிகிறது. தனது படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய அவருக்கு, விஜய் டிவி தொகுப்பாளினி திவ்ய தர்சினி, இந்த ஆண்டு சிறப்பாக அமையவும், நிறைய படங்களில் நடிக்கவும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
சிம்பு தற்போது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நல்ல உடல் நலத்துடனும் சந்தோசமாகவும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று சிம்புவிற்கு வாழ்த்துக்களைத்
தெரிவித்துள்ளார்.
இதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் மகத் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளனர்.
பிறந்த நாள் உற்சாகத்தோடு, நடிகர் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தின் டீசரை இன்று காலை சிலம்பரசன் வெளியிட்டார்.