இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கானுக்கு நடிகர் காஜல் அகர்வால் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் சர்ச்சை நாயகன் என்று அழைக்கப்படும் சல்மான்கான் இன்று தனது 52 ஆவது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு உலகளவில் இருந்து அவரது ரசிகர்களை தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே போல் சல்மானின் நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துகளை சமூகம் வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் சல்மான்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். பிறந்த நாள் வாழ்த்துகளுடன், காஜலும் சல்மானும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சல்மானுக்கு எப்போதுமே பெண் ரசிகைகள் ஏராளம் என்ற செய்தி உலா வருவது வழக்கம்.இதை நிரூபிக்கும் வகையில் பெண் நடிகைகளிடம் இருந்தும் சல்மானுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.