\
ஷட்- அப் நாயகி ஓவியா பிறந்தநாள்!

ஷட்- அப் நாயகி ஓவியா பிறந்தநாள்!

ஷட்- அப் நாயகி ஓவியா பிறந்தநாள்!
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வராவிட்டாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் நடிகை ஓவியா.

தமிழில், களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன் பின்பு பெரிய அளவில் புகழ்பெறவில்லை. ஓவியா "மதயானைக் கூட்டம்", "கலகலப்பு" திரைப்படங்களின் மூலம் ஓரளவுக்கு பெயர் கிடைத்தது.  உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கமல் - மாதவன் நடித்த "மன்மதன் அம்பு" படத்தில் கூட ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அப்போதும் அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. 2007-இல் அறிமுகமானவர் 2017 ஆம் ஆண்டு வரை மிக சொர்ப்பமான படத்தில் மட்டுமே நடித்தார்.


ஆனால் தனியார் தொலைக்காட்சியில் வெளியான பிக்-பாஸ் நிகழ்ச்சி, ஓவியாவுக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது. பிக் பாஸ் வீட்டில் 80 நாள்கள் இருந்த அவரின் செயல்கள், ஓவியாவுக்கு பெரிய ரசிக பட்டாளமே உண்டானது. ரசிகர்கள் பித்துப்பிடித்து போய் சமூக வலைத்தளத்தில், "ஓவியா ஆர்மி" கூட ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்டவரின் பிறந்தநாள் இன்று என்றால் சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள்,  #HappyBirthdayOviya என்ற ஹேஷ்டாக்குடன் சமூக வலைத்தளங்களில் ஓவியாவின் பிறந்தநாளை டிரெண்டாக்கியுள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com