‘ஹேப்பி பர்த்டே’ நயன்தாரா: வாழ்த்து மழையில் லேடி சூப்பர் ஸ்டார்

‘ஹேப்பி பர்த்டே’ நயன்தாரா: வாழ்த்து மழையில் லேடி சூப்பர் ஸ்டார்
‘ஹேப்பி பர்த்டே’ நயன்தாரா: வாழ்த்து மழையில் லேடி சூப்பர் ஸ்டார்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரின் ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹரி இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'ஐயா' திரைப்படம் மூலம் கோலிவுட் திரையுலகில் கால்பதித்தவர் நயன்தாரா. தொடர்ந்து சந்திரமுகி, கஜினி உள்பட பல வெற்றி படங்களில் நடித்து கோலிவுட்டின் முதன்மை நாயகியாக மாறினார். தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற பெயரும் நயன்தாராவுக்கு கிடைத்தது. இடையில் பிரபுதேவா மீது கொண்ட அன்பால் தனது திரையுலக வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்த நயன்தாரா, அதன்பின் அந்த காதல் முறிந்துபோனதால் மீண்டும் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். அப்போதும் ரசிகர்கள் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர்.

சர்ச்சை நாயகி, காதல் நாயகி என எப்போதுமே பாப்புலாரிட்டி, ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கு முதலிடம்தான். பொதுவாகவே தற்போது வரும் கதாநாயகிகளின் திரையுலக வாழ்க்கை ஐந்தாறு ஆண்டுகளுக்குள் ஓரங்கட்டப்பட்டு விடுகிறது. ஆனால் நயன்தாராவே அசால்டாக கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார். டாப் ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாராவின் புகழும் உச்சம்தான். அண்மையில் வெளியான அறம் படம் அவருக்கு இன்னும் கூடுதல் ரசிகர்களை கூட்டியது. தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வரும் நயன்தாரா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

நயன்தாராவுக்கு கோலிவுட்டில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர்கள் எல்லோரும் தங்களது சமூக வலைத்தள பக்கம் மூலம் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் #HBDLadySuperStarNayanthara என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இன்னும் ஏராளமான தரமான படங்களில் நடித்து திரைத்துறையில் பல ஆண்டுகள் சாதிக்க வேண்டும் எனவும் நயன்தாராவுக்கு ரசிகர்கள் அன்பு கோரிக்கை வைத்துள்னர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com