\
ஹனுமானா? ராவணனா? பல்வாள்தேவன் ராணா மீது குழப்பம்

ஹனுமானா? ராவணனா? பல்வாள்தேவன் ராணா மீது குழப்பம்

ஹனுமானா? ராவணனா? பல்வாள்தேவன் ராணா மீது குழப்பம்
Published on

பாகுபலி படத்தில் பல்வாள் தேவனாக நடித்த ராணா ஹனுமான் காவியப்படத்தில் நடிக்க இருக்கிறார். 

பாகுபலி இரண்டு பாகங்களிலும் வலுவான கதாபத்திரத்தில் நடித்திருந்த ராணா அடுத்து நேனே ராஜூ நேனே மந்திரி படத்தில் நடித்திருந்தார். அந்தப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மோகன் பாபு இயக்கவுள்ள ஹனுமான் படத்தில் ராணா நடிக்க இருக்கிறார். ராணாவின் உடலமைப்பு திடகாத்திரமாக இருப்பதால் அவரை ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா அல்லது ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா என இயக்குநர் மோகன்பாபு யோசனையில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கதை விவாதங்கள், படப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com