எம்.ஜி.ஆர், சந்திரபாபு, டி.ஆர்.ராஜகுமாரி நடித்து 1955-ல் வெளியான படம், ’குலேபகாவலி’. இந்த டைட்டில் இப்போது பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு வெளியானது.
கல்யாண் இயக்கும் இந்தப் படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கேஜே ராஜேஷ் தயாரிக்கிறார். ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக சென்னையில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில் போடப்பட்டுள்ள இந்த செட்டில் பிரபுதேவாவும் ஹன்சிகாவும் ஆடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இது முழு காமெடி படம் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை, ஹாலிவுட் டெக்னீஷியன்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்.