தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஹன்சிகாவுக்கு இப்போது குறிப்பிடும்படியான வாய்ப்புகள் இல்லை. இதனால், அவரது கவனம் மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.
பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லான் நடிக்கும் வில்லன் படம் மூலம் மலையாளத்தில் கால்பதிக்கும் ஹன்சிகா, தன்னை மல்லுவுட் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று திடமாக நம்புகிறாராம். இந்த படம் மூலம் விஷாலும் மலையாளத்தில் அறிமுகமாகிறார். மோகன்லாலுக்கு வில்லனாக விஷால் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் ஹன்சிகாவின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்து படக்குழுவினர் ரகசியம் காத்து வருகின்றனர். நடிகர் விஷால் நடித்து வரும் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில், ஹன்சிகா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.