\
'வில்லன்' படத்தில் வில்லியாக ஹன்சிகா

'வில்லன்' படத்தில் வில்லியாக ஹன்சிகா

'வில்லன்' படத்தில் வில்லியாக ஹன்சிகா
Published on: 

தமிழில் பெரியளவில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், நடிகை ஹன்சிகாவின் கவனம் மற்ற மொழித் திரைப்படங்களில் திரும்பியுள்ளது. 

நடிகர் மோகன்லாலின் வில்லன் என்ற படத்தில், ஹன்சிகா நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி பேசியிருக்கும் ஹன்சிகா, மலையாள திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், அது தற்போது நிறைவேறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வில்லன் திரைப்படத்தில் நடிகர் விஷாலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை ஹன்சிகா தற்போது தமிழில் பிரபுதேவாவின் குலேபகாவலி படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com