\
ஹாலிவுட் நடிகைக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை!

ஹாலிவுட் நடிகைக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை!

ஹாலிவுட் நடிகைக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை!
Published on

பிரபல ஹாலிவுட் நடிகை ஹல்லே பெர்ரி, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை செய்துள்ளார்.

எக்ஸ்-மென், டை அனதர் டே, மான்ஸ்டர்’ஸ் பால், ரோபோ, டார்க் டைட் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஹல்லே பெர்ரி. மாஸ்டர்’ஸ் பால் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2002-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதை பெற்றவர் இவர். 
நான்கு நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் கடந்த 8-ம் தேதி இந்தியா வந்த இவர், மும்பை உட்பட பல பகுதிக்குச் சென்றார். சனிக்கிழமை கேரளா வந்தார். ஆழப்புலாவில் உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில் தங்கினார். கடற்கரை, கோயில் உள்ளிட்டப் பகுதிகளில் ஜாலியாகச் சுற்றினார்.

யாருக்கும் அவர் ஆஸ்கர் விருதுபெற்ற நடிகை என்று தெரியவில்லை. தான் சுற்றிய பகுதிகளின் புகைப்படங்களை சமூக வலைத்தில் வெளியிட்டுள்ளார் பெர்ரி. பின்னர் அவர் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார்.

அவர் எங்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார் என்பதையோ, இந்த சிகிச்சையை எதற்காக மேற்கொண்டார் என்பதையோ தெரிவிக்கவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com