\
H. Vinoth Clarifies Jana Nayagan Shoot at TVK Rally
எச். வினோத்Pt web

கரூர் விவகாரம் | ஜனநாயகன் படபிடிப்பு நடந்ததா? எச். வினோத் விளக்கம்!!

கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஜனநாயகன் படபிடிப்பு நடந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு படக்குழு எந்த விளக்கமும் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தசூழலில் தான் தற்போது அதற்கு இயக்குநர் எச். வினோத் விளக்கமளித்துள்ளார்.
Published on

முதல்வர் விஜய் நடித்து எச். வினோத் இயக்கிய ஜனநாயகன் திரைப்படம் படம், ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஜூலை 23-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே, இத்திரைப்படம் இணையத்தில் லீக் ஆகியிருந்தாலும், நடிகராகவிருந்து தவெக தலைவராக மாறி தற்போது தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும் ச. ஜோசப் விஜயின் கடைசி படமாக ஜனநாயகன் இருப்பதால், இத்திரைப்படம் அவரது ரசிகர்களிடையே கொண்டாட்டங்களையும் தாண்டி எமோஷனலாக பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன்
ஜனநாயகன்web

இந்தசூழலில் தான், இத்திரைப்படத்தின் இயக்குநரான எச். வினோத் இத்திரைப்படம் தொடர்பாக யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில், கரூர் துயர சம்பவத்தின் போது 41 பேர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அப்போது ஜனநாயகன் படபிடிப்பு நடந்ததாக பலரும் குற்றஞ்சாட்டியிருந்தனர். உண்மையில் அப்போது படபிடிப்பு நடந்ததா? என கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்துப் பேசியிருக்கும் எச். வினோத், ”நான் கரூர் சம்பவத்தின் போது, சென்னையில் இருந்தேனா? அல்லது வேறு எங்கேனும் இருந்தேனா என்பதை காவல்துறையால் 15 அல்லது 20 நிமிடங்களில் கண்டுபிடித்து விட முடியும். ஊடகத்திற்கு அதிகபட்சம் 15 மணி நேரங்கள் ஆகும். CCTV-யோ, என் போனையோ ட்ராக் செய்து கண்டு பிடித்திருக்கலாம். நான் போகாமா படபிடிப்பு நடந்திருந்தது என்றால்.. ஜனநாயகம் படம் லீக் ஆகிடுச்சி அதில் கரூர் ஷாட் இருந்தால் தெரிந்திடும்.

விஜய் - எச். வினோத்
விஜய் - எச். வினோத்Pt web

எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது என்னன்னா, என்னுடைய மனைவிகிட்ட நிறைய பேர் வந்து “ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டாங்களா? அவங்க வீட்ல போய் அப்படியெல்லாம் எடுத்துட்டாங்களா?”ன்னு கேட்டாங்க. இவ்வளவு மக்கள் நம்பும்போது இன்னும் கவனமா Journalism இருக்கலாமேன்னு என்னோட கவலையா இருந்தது.

மக்களாட்சியோட 4-வது தூண் பொய்களை உருவாக்கி பொய்களை பரப்ப ஆரம்பிச்சதுன்னா.. அதுவும் ஒரு ரேஷனல் திங்கர்னு அறியப்பட்ட ஒருத்தரே அப்படி செய்யும்போது அது ஒட்டுமொத்த சிஸ்டத்தையே collapse பண்ணும்னு எனக்கு தோணுது.. ஒரு நாள் அவரை நேர்ல பார்த்தா நான் கண்டிப்பா கேப்பேன். அவர் பண்ணது பெரிய தப்பு. அவர் பண்ணதை நிறைய பேர் carry பண்ணதும் பெரிய தப்பு. அப்படி ஒன்னு நான் சத்தியமா பண்ணல” எனத் தெரிவித்திருக்கிறார்.

H. Vinoth Clarifies Jana Nayagan Shoot at TVK Rally
”ஜனநாயகனில் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை!” - ஹெச் வினோத் | H Vinoth | Jana Nayagan
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com