ஓடிடியில் வெளியாகும் ஜிவி பிரகாஷின் ‘ஐங்கரன்’

ஓடிடியில் வெளியாகும் ஜிவி பிரகாஷின் ‘ஐங்கரன்’
ஓடிடியில் வெளியாகும் ஜிவி பிரகாஷின் ‘ஐங்கரன்’

ஜி.வி பிரகாஷின் ’ஐங்கரன்’ படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ‘செல்ஃபி’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. இதனைத்தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ‘ஐங்கரன்’ கடந்த மே 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதர்வா முரளி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான் ‘ஈட்டி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவி அரசு இயக்கியுள்ள இப்படத்தில், மஹிமா நம்பியார், காளி வெங்கட் உள்ளிட்ட படர் நடித்திருந்தனர்.

காமன் மேன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை ஆஹா ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 14 நாட்கள் கழித்து வரும் மே 27 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ‘ஐங்கரன்’ வெளியாகவுள்ளது. அதே தேதியில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘ஜன கன மன’ படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com