\
வருமானவரித் துறையிடம் ஜி.வி.யைப் போட்டுக்கொடுத்த சூரி!

வருமானவரித் துறையிடம் ஜி.வி.யைப் போட்டுக்கொடுத்த சூரி!

வருமானவரித் துறையிடம் ஜி.வி.யைப் போட்டுக்கொடுத்த சூரி!
Published on: 

பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிக்கும் படம், ’செம’. அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை நடந்தது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் சூரி விழாவின் ஒரு பகுதியை தொகுத்து வழங்கினர். 

சூரி பேசும்போது, ‘வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் என் வீட்டுக்கு, வருமான வரி சோதனைக்கு வருவதாகச் சொன்னார். ஏன் என கேட்டதற்கு, நிறைய படம் நடிக்கிறீங்கன்னு சொன்னார். என்னை விட ஜி.வி.பிரகாஷ் தான் அதிக படத்தில் நடிக்கிறார், அவரை விட்டுட்டீங்களேன்னு சொன்னேன். நிறைய படங்கள் நடிச்சாலும் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கார் ஜிவி பிரகாஷ்’ என்றார் சூரி. 

’இயக்குனர் வள்ளிகாந்த் ஒரு காட்சிக்கு 40 டேக் வரை பொறுமையாக எடுப்பார். டப்பிங்கிலும் சரி, ஷூட்டிங்கிலும் சரி அவரை திருப்திப்படுத்த முடியாது. பாண்டிராஜ் பட்டறையில் இருந்து நிறைய இயக்குனர்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்த வள்ளிகாந்தும் நல்ல இயக்குனராக வருவார்’ என்றார் மன்சூர் அலிகான். 

இயக்குனர் பாண்டிராஜ், படத்தின் நாயகி அர்த்தனா, மைம் கோபி, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன், தனஞ்செயன், ராஜசேகர பாண்டியன், இயக்குனர்கள் வசந்தபாலன், பொன்ராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com