”மூணாறு அரசியலை பேசும் ‘ரபெல்’ தமிழ் சினிமாவில் முக்கிய படமாக இருக்கும்” - பா.ரஞ்சித்

”மூணாறு அரசியலை பேசும் ‘ரபெல்’ தமிழ் சினிமாவில் முக்கிய படமாக இருக்கும்” - பா.ரஞ்சித்

”மூணாறு அரசியலை பேசும் ‘ரபெல்’ தமிழ் சினிமாவில் முக்கிய படமாக இருக்கும்” - பா.ரஞ்சித்
Published on

மூணாறு நிலப்பரப்பின் அரசியலை பதிவு செய்யும் திரைப்படமாக ’ரெபெல்’ இருக்கும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘பேச்சிலர்’, ‘ஜெயில்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள ’ரெபெல்’ திரைப்படத்தின் துவக்க நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், நலன் குமரசாமி, தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா சி.வி.குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், மூணாறு பகுதி மற்றும் அங்குள்ள மக்களின் அரசியலை தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அதனால், அதனை பதிவு செய்ய உள்ள ’ரெபெல்‘ திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com