’விர்ஜின் மாப்ள’ ஜி.வி.பிரகாஷ்

’விர்ஜின் மாப்ள’ ஜி.வி.பிரகாஷ்
’விர்ஜின் மாப்ள’ ஜி.வி.பிரகாஷ்

ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணி ’விர்ஜின் மாப்ள’ படத்திற்காக மீண்டும் இணைகிறது.

ஜி.வி.பிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். ஆனால் சிம்புக்கு இந்தப் படம் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை.

இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன், மீண்டும் ஜி.வி.பிரகாஷை வைத்தே தனது அடுத்த படத்தை இயக்குகிறார்.’விர்ஜின் மாப்ள’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஊட்டியில் தொடங்கவுள்ளது. மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறது படக்குழு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com