முதல்ல ஜோதிகா? இப்ப நயன்தாராவா? இவர் வேற லெவல்

முதல்ல ஜோதிகா? இப்ப நயன்தாராவா? இவர் வேற லெவல்

முதல்ல ஜோதிகா? இப்ப நயன்தாராவா? இவர் வேற லெவல்
Published on

முதலில் ஜோதிகாவுடன் நடித்த இளம் ஹீரோ அடுத்ததாக நயன்தாராவுடன் நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கப் போகும் புதிய படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. அந்தப் படத்திற்கான அறிவிப்பு இன்னும் முறையாக வெளியிடப்படவில்லை. தற்போதைக்கு ‘சர்வம் தாளமயம்’, ‘அடங்காதே’, ‘செம’ எனப் படங்களை பிரகாஷ் தன் கையில் வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் இயக்க உள்ள படத்தில் பிரகாஷூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.  ஆனால் இந்தச் செய்தி இன்னும் உறுதியாகவில்லை. 

நயன் தற்போது ‘சைரா நரசிம்ஹ ரெட்டி’, அஜித்தின் ‘விசுவாசம்’ என படுபிசியாக இருக்கிறார். விஜய் இயக்கியுள்ள ‘கரு’விரைவில் வெளியாக உள்ளது. திரை உலகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அதன் வெளியீடு தாமதமாகி வருகிறது. அதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம். பிரகாஷும், விஜய்யும் திரை உலகில் பல வருட நெருங்கிய நண்பர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com