\
விஜய்யை விடாமல் துரத்தும் ஜி.வி.பிரகாஷ்

விஜய்யை விடாமல் துரத்தும் ஜி.வி.பிரகாஷ்

விஜய்யை விடாமல் துரத்தும் ஜி.வி.பிரகாஷ்
Published on

விஜய்யின் பைரவா படத்துடன் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ படம் வெளிவராததையடுத்து ஜி.வி.பிரகாஷின் அடங்காதே படத்தின் டிரைலர் பைரவா படத்துடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பைரவா படத்துடன் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ படம் பொங்கலுக்கு வெளிவரும் என்ற செய்தியை அடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணனோடு வரோம் என்று பதிவிட்டிருந்தார். ஆனால் புரூஸ் லீ படம் பொங்கலுக்கு வெளிவராது என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் சோகத்தில் ஆழ்ந்திருந்த ஜி.வி.பிரகாஷுக்கு, அவர் நடிப்பில் தயாராகி வரும் அடங்காதே படத்தின் டிரைலர் பைரவா படத்தின் இடைவெளியில் வெளியிடப்படவுள்ளதால் சந்தோசத்தில் இருக்கிறார். அதற்கு காரணம் தான் சொன்னது போல விஜய் படத்துடன் தன்னுடைய படமும் வரப்போகிறது என்றது தான்.

இதையடுத்து ரசிகர் ஒருவர் பொங்கலுக்கு பைரவா படத்தை முதலில் பார்பீர்களா இல்ல புரூஸ் லீ படம் பார்பீர்களா என்று கேட்டதற்கு ‘பைரவா’ படம் காலையில் முதல் ஷோ என்றும் அதை தொடர்ந்து புரூஸ் லீ என்றும் பதிலளித்திருந்த ஜி.வி.பிரகாஷ், சொன்னது போல இதையும் செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com