\
ஜிவி பிரகாஷ்-இன் "4 ஜி" பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜிவி பிரகாஷ்-இன் "4 ஜி" பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜிவி பிரகாஷ்-இன் "4 ஜி" பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

இயக்குனர் வெங்கட் பாக்கர் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ்குமார், சதிஷ் நடித்திருக்கும் 4ஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

திரையுலகில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம்வரும் ஜி.வி பிரகாஷ், வெங்கட் பாக்கர் இயக்கத்தில், 4ஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சி.வி குமார் தயாரிக்கிறார். 4 ஜி படம் நான்காம் தலைமுறையின் காதலை சொல்லும் படமாக உருவாகிறது. 4 ஜி படத்தில் மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் ஜிவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையும் அமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 4ஜி திரைப்படம் நகைச்சுவை அதிரடி திரைப்படமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com