\
கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா: 'குலேபகாவலி'க்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி

கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா: 'குலேபகாவலி'க்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி

கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா: 'குலேபகாவலி'க்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி
Published on
'குலேபகாவலி' பட இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா மீண்டும் நடிக்கவுள்ளார்.
பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல், யங் மங் சங், ஊமை விழிகள் உள்ளிட்ட பல திரைப்படங்களின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், வெளியாகாமல் உள்ளது. தயாரிப்பு தரப்பில் உள்ள பணப் பிரச்னைகளே அதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. அத்துடன், பிரபுதேவா பாலிவுட்டில் இயக்கிய 'ராதே' திரைப்படமும் வியாபார ரீதியாக வெற்றியடைந்தாலும், எதிர்மறை விமர்சனங்களே கிடைத்தன.
இந்நிலையில், குலேபகாவலி படம் மூலம் வெற்றியைக் கொடுத்த இயக்குநர் கல்யாண் உடன் பிரபுதேவா மீண்டும் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com