சினிமா
ஜிஎஸ்டியால் சினிமாத்துறை வளர்ச்சியடையும்: ஷாருக்கான்
ஜிஎஸ்டியால் சினிமாத்துறை வளர்ச்சியடையும்: ஷாருக்கான்
ஜிஎஸ்டியால் சினிமாத்துறை வளர்ச்சியடையும் என பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கூறியுள்ளார்.
சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி அறிவிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரியால் சினிமா டிக்கெட்களுக்கு உச்சபட்ச வரியான 28 சதவீதம் விதிக்கப்படுவதால் அவற்றின் விலை உயரும். ஆனால், முன்பு இவற்றுக்கு விதிக்கப்பட்ட வரியை விட தற்போது அதிகமாக உள்ளது என பல திரையரங்கு உரிமையாளர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக் கான், ஜிஎஸ்டி நீண்ட கால பலன் தரும் நடவடிக்கை என்று தெரிவித்தார். ஜிஎஸ்டியால் திரைப்பட டிக்கெட் விலை உயரவில்லை என்றும் அவர் கூறினார்.