\
தெலுங்கு மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனம் நீக்கம்

தெலுங்கு மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனம் நீக்கம்

தெலுங்கு மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனம் நீக்கம்
Published on

தமிழகத்தை உலுக்கிய மெர்சல் நாளை ஆந்திராவில் மையம் கொள்கிறது. அதில் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி வசனம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை உலுக்கி வந்த மெர்சல் திரைப்படம் நாளை ஆந்திராவில் வெளியாகிறது. இப்படம் தெலுங்கில் 'அதிரிந்தி' என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்திய அளவில் சர்ச்சை எழுந்ததால் இதற்கான சென்சார் திரும்ப பெறுவதில் தாமதங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிரிந்திக்கு 'யு/ஏ' சான்று வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாளை மறுநாள் 27ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் படம் வெளியாக உள்ளது. அதில் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி வசனம் நீக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பு பெற்ற மெர்சலுக்கு தெலுங்கிலும் அதே வரவேற்பு கிடைக்குமா என பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com