\
சசிக்குமார் திரைப்படத்தில் சன்னி லியோனி, 'டிக் டாக்' புகழ் ஜி.பி.முத்து

சசிக்குமார் திரைப்படத்தில் சன்னி லியோனி, 'டிக் டாக்' புகழ் ஜி.பி.முத்து

சசிக்குமார் திரைப்படத்தில் சன்னி லியோனி, 'டிக் டாக்' புகழ் ஜி.பி.முத்து
Published on

சசிக்குமார் உடன் சன்னி லியோனி, டிக் டிக் புகழ் ஜிபி முத்து இணைந்து நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

பிரபல நடிகை சன்னி லியோனி 2014ஆம் ஆண்டு தமிழில் வடகறி படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிகரும் இயக்குநருமான சசிக்குமாருடன் தமிழில் நடிக்கவிருக்கிறார். இதுவரை பெயரிடப்படாத காமெடி - த்ரில்லர் படமான இப்படத்தில் சன்னி லியோனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இவருடனான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமான ஜிபி முத்து, மருத்துவர் தோற்றத்தில் நடிக்கிறார். அவருடனான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, வடிவுடையான் இயக்கத்தில் வரலாற்று கதையான வீரமாதேவி திரைப்படத்தில் சன்னி லியோனி நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் வெளியாக இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com