\
‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ சஸ்பென்ஸை உடைத்தார் கெளதம்!

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ சஸ்பென்ஸை உடைத்தார் கெளதம்!

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ சஸ்பென்ஸை உடைத்தார் கெளதம்!
Published on

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் பெயரை அதிகாரப்பூர்வமாக கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் - மேகா ஆகாஷ்  நடிப்பில், கெளதம் மேனன் இயக்கிருக்கும் திரைப்படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தின் இசையமைப்பாளரின் பெயரை இயக்குநர் கெளதம் மேனன் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘மறு வார்த்தை பேசாதே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் ரசிகர்களிடம் எழுந்தது. மேலும் இந்த பாடலின் இசையை வைத்து இதன் இசையமைப்பாளர் கிடாரி படத்திற்கு இசையமைத்த ‘தர்புகா சிவா’தான் என்று பல ரசிகர்கள் கணித்திருந்தனர். இருப்பினும் இயக்குனர் கெளதம் மேனன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், தீபாவளி திருநாளான இன்று என்னை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளரின் பெயரை பலரும் கணித்திருந்தாலும் இதோ அதிகாரப்பூர்வமாக ‘தர்புகா சிவா’ என்று குறிப்பிட்டு ‘மறுவார்த்தை - ரீசர்ன்ங் வெர்ஷன்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தர்புகா சிவா இசையில் பாடகர் சித்ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com