அரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்
தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் அந்தந்த வார நிகழ்வுகள் குறித்து வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் பேசுவதை வழக்கமாய் கொண்டுள்ளார். ஒவ்வொரு வார இறுதியில் கமல் பேசும்போது, சூசகமாக பல்வேறு அரசியல் கருத்துகளை பேசுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவும், இந்தவாரம் சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் அவர் ஏதும் அரசியல் கருத்துகளை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஒளிப்பரப்பட்ட நிகழ்ச்சியில் அவர் அரசியல் தொடர்பான கருத்தை வெளியிட்டார்.
பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை அங்கிருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு பொறுப்பும் வழங்கப்படும். அவ்வாறு கடந்தவாரம் பீக்பாஸ் வீட்டின் சமயல் செய்யும் பொறுப்பு நடிகை மும்தாஜ் தலைமயிலான குழுவுக்கு வழங்கப்பட்டது. மும்தாஜின் சமயலையும், அவரின் விருந்தோம்பலையும் சகப் போட்டியாளர்கள் ஏகமாய் புகழ்ந்தனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய கமல்ஹாசன் "மும்தாஜூக்கு கொடுக்கப்பட்டது கடமை. அவர் தன் கடமையைதான் செய்துள்ளார். அதை தியாகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இப்படிதான் அரசாங்களும் கடமையை செய்வதை தியாகம் போல் நினைக்கிறார்கள்" என தெரிவி்த்தார்.