பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி: பாலகிருஷ்ணா ஜிலீர்

பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி: பாலகிருஷ்ணா ஜிலீர்

பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி: பாலகிருஷ்ணா ஜிலீர்
Published on

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா நிறுவனம் சார்பாக, நரேந்தரா தயாரித்துள்ள படம், ’கெளதமி புத்ர சாதர்கணி’. தெலுங்கில் வெளியான இந்தப் படம், டப் செய்யப்பட்டு தமிழில் ரிலீஸ் ஆகிறது. பாலகிருஷ்ணா, ஹேமாமாலினி, ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி உட்பட பலர் நடித்துள்ளனர். வசனத்துடன் தமிழாக்கப் பொறுப்பேற்றிருப்பவர் மருதபரணி. கிரிஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கார்த்தி வெளியிட, கே.எஸ்.ரவிகுமார் பெற்றார். பாலகிருஷ்ணா, இயக்குனர் கிரீஷ், தயாரிப்பாளர் சி.கல்யாண், காட்ரகட்ட பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
விழாவில் பாலகிருஷ்ணா பேசும்போது, ‘நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். தமிழ்நாட்டு தண்ணி குடிச்சி வளர்ந்தவன். இது நம்மளை ஆண்ட ஒரு மன்னனின் கதையை கொண்ட படம். இந்த கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி... இவங்களை நினைச்சுக்கிட்டேன். இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது. அம்மாவை பெருமைப் படுத்துங்கள். நிச்சயம் நன்றாக இருப்போம். அடுத்து கே.எஸ் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். ஷூட்டிங் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்கிறது’ என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com