சினிமா
‘சிக்சர்’ பட தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ்
‘சிக்சர்’ பட தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ்
'சிக்சர்' பட தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் வைபவ் நடிப்பில் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்சர்’. தினேஷ் கண்ணேன், மற்றும் ஸ்ரீதர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் சிக்ஸர் பட தயாரிப்பாளர்களான தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு நடிகர் கவுண்டமணி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், படத்தில் தன்னை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இருப்பதாக கவுண்டமணி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் தன் அனுமதி பெற்றாமல் தன் புகைப்படம், மற்றும் தான் சார்ந்த காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சின்னதம்பி படத்தில் கவுண்டமணி நடித்த காட்சியை கிண்டல் செய்யும் வகையில் 'சிக்சர்' படத்தில் வசனங்கள் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.