49 ஓ படத்தை இயக்கிய ஆரோக்கிய தாஸுடன் சட்டமன்றத்தில் பேய் படத்தில் மீண்டும் இணைகிறார் கவுண்டமணி.
‘பொறுப்பிருக்காடா ஒங்களுக்கெல்லாம்?’ என்று கவுண்டமணி மூலம் பொட்டில் அறைந்த மாதிரி 49- ஓ படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் பி.ஆரோக்கியதாஸ். ஆட்சி கனவோடு நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களையும் வாரி அடித்து வம்புக்கு இழுத்திருந்தார்கள். விமர்சன ரீதியாக நற்பெயரைப் பெற்ற அந்தப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கவுண்டமணியுடன் கைகோர்க்கிறார் ஆரோக்கியதாஸ். ’சட்டமன்றத்தில் பேய்’ எனப்பெயரிடப்பட்டு இருக்கும் இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் முன்னணி நாயகன் ஒருவரும் நடிக்க இருக்கிறாராம். தற்கால அரசியலை கவுண்டமணி நையாண்டி செய்ய இருப்பதால் ‘ சட்டமன்றத்தில் பேய்’ படத்திற்கு தற்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.