\
ஜீவாவின் ‘கொரில்லா’ படப்பிடிப்பு தொடங்கியது

ஜீவாவின் ‘கொரில்லா’ படப்பிடிப்பு தொடங்கியது

ஜீவாவின் ‘கொரில்லா’ படப்பிடிப்பு தொடங்கியது
Published on: 

நடிகர் ஜீவாவின் நடிப்பில் உருவாகவுள்ள ‘கொரில்லா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

டான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகவிருக்கும் படம் ‘கொரில்லா’. ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் முதல் நாள் படபிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

இதனிடையே இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இதுதான் முதன்முறை. கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com