படப்பிடிப்பில் விபத்து: பைக்கில் இருந்து விழுந்து கோபிசந்த் படுகாயம்!

படப்பிடிப்பில் விபத்து: பைக்கில் இருந்து விழுந்து கோபிசந்த் படுகாயம்!
படப்பிடிப்பில் விபத்து: பைக்கில் இருந்து விழுந்து கோபிசந்த் படுகாயம்!

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் படுகாயமடைந்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

'ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்தவர், கோபிசந்த். சென்னை மைலாப்பூரில் படிப்பை முடித்தவரான இவர், தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் இப்போது பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அருகேயுள்ள மண்ட்வாவில் நடந்து வந்தது. 

காட்சிப்படி கோபிசந்த், பைக்கில் வேகமாக வந்து சண்டை கலைஞர்களுடன் மோத வேண்டும். இந்தக் காட்சியை இரண்டு மூன்று கேமரா வைத்து படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக பைக்கில் இருந்து கோபிசந்த் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டன்ட் கலைஞர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோபிசந்த் நலமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, ஷெட்யூல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com