சினிமா
தியேட்டர் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
தியேட்டர் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் அனைத்து மூடப்பட்டன. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கை கொண்ட ஊழியர்களை கொண்டு நடத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது. ஆனால் சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதிக் கொடுக்கப்படவில்லை. இதனால் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ “ தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். அது தொடர்பாக திரைத்துறையினர், நாளை மறுநாள் முதல்வரை சந்தித்துப் பேச இருக்கின்றனர்”எனக் கூறியுள்ளார்.