சினிமா
நான்கு சிறுவர்களுடன் மீண்டும் கோயம்பேட்டில் களமிறங்கிய இயக்குநர்!
நான்கு சிறுவர்களுடன் மீண்டும் கோயம்பேட்டில் களமிறங்கிய இயக்குநர்!
2014 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் விஜய் மில்டன்.
கோயம்பேடு மார்க்கெட்டில் அனாதையாக வாழும் நான்கு சிறுவர்களை மையப்படுத்தி எடுத்திருந்த கோலி சோடா படத்தை பசங்க பட இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருந்தார். இதனை அடுத்து விக்ரம் நடிக்க 10 எண்றதுக்குள்ள, தேவயானியின் கணவர் ராஜகுமாரன், பரத் நடித்த கடுகு ஆகிய படங்களை இயக்கிய விஜய் மில்டன் மீண்டும் கோலி சோடா -2 படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார். இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில்’ இன்று கோலிசோடா -2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார். இந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.